Library · ta

Psalms 121

121:1 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது? 121:2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து வரும். 121:3 தேவன் உன்னை விழவிடமாட்டார். உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார். 121:4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. தேவன் ஒருபோதும் உறங்கார். 121:5 கர்த்தர் உன் பாதுகாவலர். அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார். 121:6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது. 121:7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். 121:8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.