Library · ta

Psalms 136

136:1 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:2 தேவாதி தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:3 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:4 ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:5 வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:6 தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:7 தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:8 தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:9 தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்கலையும் உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:17 தேவன் வல்லமையுள்ள அரசர்களைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:18 தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:19 தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:20 தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 136:26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.