Ezra 2
2:1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2:2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:
2:3 பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர்.
2:4 செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர்.
2:5 ஆராகின் வம்சத்தார் 775 பேர்.
2:6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.
2:7 ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
2:8 சத்தூவின் வம்சத்தார் 945 பேர்.
2:9 சக்காயின் வம்சத்தார் 760 பேர்.
2:10 பானியின் வம்சத்தார் 642 பேர்.
2:11 பெபாயின் வம்சத்தார் 623 பேர்.
2:12 அஸ்காதின் வம்சத்தார் 1,222 பேர்.
2:13 அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர்.
2:14 பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர்.
2:15 ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.
2:16 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர்.
2:17 பேசாயின் வம்சத்தார் 323 பேர்.
2:18 யோராகின் வம்சத்தார் 112 பேர்.
2:19 ஆசூமின் வம்சத்தார் 223 பேர்.
2:20 கிபாரின் வம்சத்தார் 95 பேர்.
2:21 பெத்லெகேமின் வம்சத்தார் 123 பேர்.
2:22 நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர்.
2:23 ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர்.
2:24 அஸ்மாவேத்தின் வம்சத்தார் 42 பேர்.
2:25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் 743 பேர்.
2:26 ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர்.
2:27 மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.
2:28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர்.
2:29 நேபோவின் வம்சத்தார் 52 பேர்.
2:30 மக்பீஷின் வம்சத்தார் 156 பேர்.
2:31 மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
2:32 ஆரீமின் வம்சத்தார் 320 பேர்.
2:33 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
2:34 எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.
2:35 செனாகின் வம்சத்தார் 3,630 பேர்.
2:36 ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.
2:37 இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர்.
2:38 பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.
2:39 ஆரீமின் வம்சத்தார் 1,017 பேர்.
2:40 லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர்.
2:41 பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.
2:42 வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர்.
2:43 நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,
2:44 கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,
2:45 லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,
2:46 ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,
2:47 கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,
2:48 ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,
2:49 ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,
2:50 அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,
2:51 பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,
2:52 பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,
2:53 பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,
2:54 நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.
2:55 சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
2:56 யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,
2:57 செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
2:58 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர்.
2:59 தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
2:60 தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர்.
2:61 ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.
2:62 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
2:63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
2:64 சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.
2:65 அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
2:66 அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,
2:67 அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720,
2:68 வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
2:69 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.
2:70 ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.