Library · ta

1 Chronicles 8

8:1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும், 8:2 நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான். 8:3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள். 8:4 அபிசுவா, நாமான், அகோவா, 8:5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள். 8:6 கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே. 8:7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான். 8:8 அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர, 8:9 தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும், 8:10 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள். 8:11 ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான். 8:12 எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன். 8:13 பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள். 8:14 அகியோ, சாஷாக், எரேமோத், 8:15 செபதியா, ஆராத், ஆதேர், 8:16 மிகாயேஸ், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள். 8:17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், 8:18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள். 8:19 யாக்கிம், சிக்ரி, சப்தி, 8:20 எலியேனாய், சில்தாய், ஏலியேல், 8:21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள். 8:22 இஸ்பான், ஏபேர், ஏலியேல், 8:23 அப்தோன், சிக்ரி, ஆனான், 8:24 அனனியா, ஏலாம், அந்தோதியா, 8:25 இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள். 8:26 சம்சேராய், செகரியா, அத்தாலியா, 8:27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள். 8:28 இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள். 8:29 கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள். 8:30 அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப், 8:31 கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள். 8:32 மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள். 8:33 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். 8:34 யோனத்தானின் மகன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான். 8:35 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். 8:36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். 8:37 மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல். 8:38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள். 8:39 அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே. 8:40 ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.