Ezra 2
2:1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2:2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:
2:3 பாரோஷின் வம்சத்தார் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
2:4 செபத்தியாவின் வம்சத்தார் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
2:5 ஆராகின் வம்சத்தார் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
2:6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
2:7 ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்.
2:8 சத்தூவின் வம்சத்தார் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
2:9 சக்காயின் வம்சத்தார் எழுநூற்று அறுபதுபேர்.
2:10 பானியின் வம்சத்தார் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
2:11 பெபாயின் வம்சத்தார் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
2:12 அஸ்காதின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
2:13 அதோனிகாமின் வம்சத்தார் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
2:14 பிக்வாயின் வம்சத்தார் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
2:15 ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.
2:16 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் தொண்ணூற்றெட்டுப்பேர்.
2:17 பேசாயின் வம்சத்தார் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
2:18 யோராகின் வம்சத்தார் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
2:19 ஆசூமின் வம்சத்தார் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
2:20 கிபாரின் வம்சத்தார் தொண்ணூற்றைந்துபேர்.
2:21 பெத்லகேமின் வம்சத்தார் நூற்றிருபத்துமூன்றுபேர்.
2:22 நெத்தோபாவின் மனிதர்கள் ஐம்பத்தாறுபேர்.
2:23 ஆனதோத்தின் மனிதர்கள் நூற்றிருபத்தெட்டுபேர்.
2:24 அஸ்மாவேத்தின் வம்சத்தார் நாற்பத்திரண்டுபேர்.
2:25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
2:26 ராமா, காபா என்பவைகளின் வம்சத்தார் அறுநூற்று இருபத்தொருபேர்.
2:27 மிக்மாசின் மனிதர்கள் நூற்றிருபத்திரண்டுபேர்.
2:28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
2:29 நேபோவின் வம்சத்தார் ஐம்பத்திரண்டுபேர்.
2:30 மக்பீஷின் வம்சத்தார் நூற்றைம்பத்தாறுபேர்.
2:31 மற்ற ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
2:32 ஆரீமின் வம்சத்தார் முந்நூற்றுஇருபதுபேர்.
2:33 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
2:34 எரிகோவின் வம்சத்தார் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
2:35 சேனாகின் வம்சத்தார் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
2:36 ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
2:37 இம்மேரின் வம்சத்தார் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
2:38 பஸ்கூரின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
2:39 ஆரீமின் வம்சத்தார் ஆயிரத்து பதினேழுபேர்.
2:40 லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் எழுபத்து நான்குபேர்.
2:41 பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
2:42 வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
2:43 நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,
2:44 கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,
2:45 லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,
2:46 ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,
2:47 கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,
2:48 ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,
2:49 ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,
2:50 அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,
2:51 பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,
2:52 பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,
2:53 பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,
2:54 நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.
2:55 சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
2:56 யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,
2:57 செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
2:58 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
2:59 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
2:60 தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
2:61 ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.
2:62 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
2:63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
2:64 சபையார் எல்லோரும் ஏகத்திற்கு நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
2:65 அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
2:66 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து,
2:67 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
2:68 வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
2:69 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசுகளையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.
2:70 ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.