Library · ta

1 Chronicles 1

1:1 ஆதாம், சேத், ஏனோஸ், 1:2 கேனான், மகலாலெயேல், யாரேத், 1:3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, 1:4 நோவா, சேம், காம், யாப்பேத். 1:5 யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 1:6 கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 1:7 யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 1:8 காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். 1:9 கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள். 1:10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான். 1:11 மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும், 1:12 பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான். 1:13 கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும், 1:14 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும், 1:15 ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும், 1:16 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான். 1:17 சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள். 1:18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். 1:19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். 1:20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், 1:21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், 1:22 ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், 1:23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள். 1:24 சேம், அர்பக்சாத், சாலா, 1:25 ஏபேர், பேலேகு, ரெகூ, 1:26 செரூகு, நாகோர், தேராகு, 1:27 ஆபிராமாகிய ஆபிரகாம். 1:28 ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள். 1:29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், 1:30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 1:31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள். 1:32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள். 1:33 மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள். 1:34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள். 1:35 ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். 1:36 எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள். 1:37 ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள். 1:38 சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள். 1:39 லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். 1:40 சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள். 1:41 ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். 1:42 திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள். 1:43 இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா. 1:44 பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 1:45 யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 1:46 ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத். 1:47 ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 1:48 சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 1:49 சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 1:50 பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல். 1:51 ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு, 1:52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, 1:53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, 1:54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.