Library · ta

1 Chronicles 6

6:1 லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி. 6:2 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல். 6:3 அம்ராமின் பிள்ளைகள் ஆரோன், மோசே, மிரியாம். ஆரோனின் மகன்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார். 6:4 எலெயாசார் பினெகாசின் தகப்பன்; பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன், 6:5 அபிசுவா புக்கியின் தகப்பன், புக்கி ஊசியின் தகப்பன். 6:6 ஊசி செரகியாவின் தகப்பன். செரகியா மெராயோத்தின் தகப்பன், 6:7 மெராயோத் அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன், 6:8 அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் அகிமாஸின் தகப்பன், 6:9 அகிமாஸ் அசரியாவின் தகப்பன், அசரியா யோகனானின் தகப்பன், 6:10 யோகனான் அசரியாவின் தகப்பன். எருசலேமில் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்தவன் இவனே. 6:11 அசரியா அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன், 6:12 அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் சல்லூமின் தகப்பன். 6:13 சல்லூம் இல்க்கியாவின் தகப்பன்; இல்க்கியா அசரியாவின் தகப்பன், 6:14 அசரியா செராயாவின் தகப்பன், செராயா யோசதாக்கின் தகப்பன். 6:15 யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதாவையும், எருசலேமையும் நாடுகடத்தியபோது, யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டான். 6:16 லேவியின் மகன்கள்: கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்கள். 6:17 கெர்சோமின் மகன்கள்: லிப்னி, சீமேயி. 6:18 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல். 6:19 மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. இவர்கள் தங்கள் முற்பிதாக்களின் வழித்தோன்றலின்படி உண்டான லேவிய வம்சங்கள். 6:20 கெர்சோமின் மகன்கள்: கெர்சோமின் மகன் லிப்னி, அவனுடைய மகன் யாகாத்; அவனுடைய மகன் சிம்மா, 6:21 அவனுடைய மகன் யோவா; அவனுடைய மகன் இத்தோ; அவனுடைய மகன் சேரா; அவனுடைய மகன் யாத்திராயி. 6:22 கோகாத்தின் சந்ததிகள்: கோகாத்தின் மகன் அம்மினதாப், அவனுடைய மகன் கோராகு, அவனுடைய மகன் ஆசீர், 6:23 அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் எபியாசாப், அவனுடைய மகன் ஆசீர், 6:24 அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் ஊரியேல், அவனுடைய மகன் உசியா, அவனுடைய மகன் சாவூல் என்பவர்கள். 6:25 எல்க்கானாவின் சந்ததிகள்: அமசாயி, அகிமோத். 6:26 அகிமோத்தின் மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சோபாய், அவனுடைய மகன் நாகாத், 6:27 அவனுடைய மகன் எலியாப், அவனுடைய மகன் எரோகாம், அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சாமுயேல். 6:28 சாமுயேலின் மகன்கள்: முதற்பேறானவன் யோயேல், இரண்டாம் மகன் அபியா. 6:29 மெராரியின் சந்ததிகள்: மகேலி, இவனது மகன் லிப்னி, இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா; 6:30 இவனது மகன் சிமெயா, இவனது மகன் அகியா, இவனது மகன் அசாயா. 6:31 யெகோவாவின் ஆலயத்திற்குள் உடன்படிக்கைப்பெட்டி தங்கியிருக்க வந்தபின், இசைக்குப் பொறுப்பாகச் சிலரை தாவீது நியமித்தான். 6:32 இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர். 6:33 தங்கள் மகன்களுடன் அங்கு பணிசெய்த மனிதர்கள் இவர்களே: கோகாத்தியரில்: இசைக் கலைஞன் ஏமான், இவன் யோயேலின் மகன், இவன் சாமுயேலின் மகன், 6:34 இவன் எல்க்கானாவின் மகன், இவன் எரோகாமின் மகன், இவன் எலியேலின் மகன், இவன் தோவாக்கின் மகன், 6:35 இவன் சூப்பின் மகன், இவன் எல்க்கானாவின் மகன், இவன் மாகாத்தின் மகன், இவன் அமசாயின் மகன், 6:36 இவன் எல்க்கானாவின் மகன், இவன் யோயேலின் மகன், இவன் அசரியாவின் மகன், இவன் செப்பனியாவின் மகன், 6:37 இவன் தாகாத்தின் மகன், இவன் ஆசீரின் மகன், இவன் எபியாசாப்பின் மகன், இவன் கோராகுவின் மகன், 6:38 இவன் இத்சாரின் மகன், இவன் கோகாத்தின் மகன், இவன் லேவியின் மகன், இவன் இஸ்ரயேலின் மகன். 6:39 ஏமானின் வலதுபக்கத்தில் நின்று அவனுடன் பணிசெய்தவனான அவன் சகோதரன் ஆசாப்: ஆசாப் பெரகியாவின் மகன், இவன் சிமெயாவின் மகன், 6:40 இவன் மிகாயேலின் மகன், இவன் பாசெயாவின் மகன், இவன் மல்கியாவின் மகன், 6:41 இவன் எத்னியின் மகன், இவன் சேராயின் மகன், இவன் அதாயாவின் மகன், 6:42 இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன், இவன் சீமேயின் மகன், 6:43 இவன் யாகாத்தின் மகன், இவன் கெர்சோமின் மகன், இவன் லேவியின் மகன். 6:44 மெராரியராகிய இவர்களது சகோதரர்கள் அவர்களுடைய இடதுபக்கத்தில் நிற்பார்கள்: அவர்களில் ஏத்தான் கிஷியின் மகன், இவன் அப்தியின் மகன், இவன் மல்லூக்கின் மகன், 6:45 இவன் அசபியாவின் மகன், இவன் அமத்சியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன், 6:46 இவன் அம்சியின் மகன், இவன் பானியின் மகன், இவன் சாமேரின் மகன், 6:47 இவன் மகேலியின் மகன், இவன் மூஷியின் மகன், இவன் மெராரியின் மகன், இவன் லேவியின் மகன். 6:48 இவர்களோடிருந்த மற்ற லேவியர்கள் இறைவனது ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் மற்ற வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டார்கள். 6:49 ஆனால் இறைவனின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியே, ஆரோனும் அவனுடைய சந்ததிகளும் மட்டுமே மகா பரிசுத்த இடத்திலுள்ள தகன பலிபீடங்களில் இஸ்ரயேலின் பாவநிவிர்த்திக்காக பலியிட்டு, தூப மேடைகளில் தூபங்காட்டும் வேலையையும் செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர். 6:50 ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா, 6:51 அவன் மகன் புக்கி, அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா, 6:52 அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, அவன் மகன் அகிதூப், 6:53 அவன் மகன் சாதோக், அவன் மகன் அகிமாஸ். 6:54 அவர்களுக்கென பிரதேசமாக நியமிக்கப்பட்ட குடியிருப்புகளின் இடங்களாவன: முதல் சீட்டு கோகாத் வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் சந்ததிகளுக்கு விழுந்தபடியால், அவர்களுக்கு அவ்விடங்கள் கொடுக்கப்பட்டன. 6:55 அதன்படி அவர்களுக்கு யூதாவிலுள்ள எப்ரோனும், அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. 6:56 ஆனால் பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களும், கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன. 6:57 ஆரோனின் சந்ததிகளுக்கு எப்ரோன் என்ற அடைக்கலப் பட்டணங்களில் லிப்னா, யாத்தீர், எஸ்தெமோவா, 6:58 ஈலேன், தெபீர், 6:59 ஆஷான், யூத்சா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களோடு அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. 6:60 பென்யமீன் கோத்திரத்திற்கு கிபியோன், கேபா, அலெமேத், ஆனதோத் ஆகிய பட்டணங்களும், அவற்றைச் சேர்ந்த மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. எல்லாமாக பதின்மூன்று பட்டணங்கள் கோகாத்திய வம்சங்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. 6:61 மீதமிருந்த மற்ற கோகாத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தின் பத்துப் பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. 6:62 கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. 6:63 மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. 6:64 இவ்வாறு இஸ்ரயேலர் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். 6:65 யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களிலிருந்தும் முன்குறிப்பிடப்பட்ட பட்டணங்களையும் கொடுத்தார்கள். 6:66 சில கோகாத்திய வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பட்டணங்கள் அவர்கள் பிரதேசமாகக் கொடுக்கப்பட்டன. 6:67 எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர், 6:68 யோக்மேயாம், பெத் ஓரோன், 6:69 ஆயலோன், காத்ரிம்மோன் ஆகியவை அவற்றோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. 6:70 எஞ்சியிருந்த கோகாத்தியரின் வம்சங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து, ஆனேரும், பீலியாமும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் இஸ்ரயேலரால் கொடுக்கப்பட்டன. 6:71 கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன: மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பாசானிலிருக்கிற கோலானையும், அஸ்தரோத்தையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். 6:72 இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத், 6:73 ராமோத், ஆனேம் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். 6:74 ஆசேர் கோத்திரத்திலிருந்தும் மாஷால், அப்தோன், 6:75 ஊக்கோக், ரேகோப் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள். 6:76 நப்தலி கோத்திரத்திலிருந்தும் கலிலேயாவிலிருக்கிற கேதேசையும், அம்மோன், கீரியாத்தாயீம் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். 6:77 லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னெயாம், காட்டா, ரிம்மோனோ, தாபோர் ஆகிய பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள். 6:78 யோர்தானின் அக்கரையிலே எரிகோவின் கிழக்கேயிருக்கிற ரூபனின் கோத்திரத்திலிருந்தும் பாலைவனத்திலிருக்கிற பேசேரையும், யாத்சா, 6:79 கெதெமோத், மேபாகாத் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள். 6:80 காத் கோத்திரத்திலிருந்து, கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம், 6:81 எஸ்போன், யாசேர் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.